ARIVERSE

#AriReviewsI was inspired by the words of those who came before me, people who turn thoughts into meaning and ideas into lasting impact. Engaging with their work feels like a conversation across time. Great work does not end when it is finished; it lives on through discussion, reflection, and review. Reviews matter because they recognize, appreciate, and keep meaningful work alive.

"Stories do not end on the page; they live on in every reader who remembers, reflects, and shares them."

#AriReviews

Book Reviews

என் நதியின் ஓட்டங்கள்

1. என் நதியின் ஓட்டங்கள்

அன்புத் தம்பி ஆவலில் ஆகி, பண்பு சொற்களை பார்த்து பகுத்து, தண்புனற் அமுத தமிழில் தந்த, நுண்சுவை நிறை நூலொன்று நுகர்ந்தேன்! முத்தமிழ் மோகத்தில் முயங்கிய மூளைக்கு, நற்தமிழ் நயந்த “நதியின் ஓட்டங்கள்”! எம் தமிழ் எடுத்து தொடுத்த தம்பிக்கு, செந்தமிழாலே செய்தேன் புகழாரம்! தம்பியின் நூலை ஆய்ந்தோம்! பாநயம் கண்டு பாராட்டி மகிழ்ந்தோம்! மரபு இலக்கியங்களை தமிழில் இன்னமும் நிறைத்திட மாணாக்கர்களே வாரீர்!

வலங்கைமான் நூர்தீன் கவிதைகள்

2. வலங்கைமான் நூர்தீன் கவிதைகள்

வலங்கைமான் நூர்தின், மௌவல் பதிப்பகத்தாராகவும், கவிபொழியும் நற்கவிஞராகவும் திகழ்பவர். இன்று, அவரோடு அவரது கவிதை புத்தகத்தையே திறனாயும் வாய்ப்பு கிடைத்தது. புறநானூற்று பின்புலம் கொண்ட, குமரிமாவட்ட வட்டாரச்சொற்கள் மிகுந்திருந்தது, கவனத்தை குவிக்கச்செய்தது! அவரது கவிதைகளை வாசித்துக்காட்டியும், நான் எழுதிய ஒரு சில கவிதைகளை வாசித்துக்காட்டியும் களித்தேன். கேள்விகளுக்கு பின்னர் கிடைத்த பாராட்டுகள், இந்நாளின் இரவை இன்முகத்தோடு கழித்து, “எந்நாளும் என்னுள்” என நிற்கபோகின்றன.

இருள்வலி

3. இருள்வலி

சந்திரா மனோகரன் ஐயா அவர்கள், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகங்காட்டுபவர். அருளமுது பதிப்பகத்தை நடத்திவருபவர். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், மொழிபெயர்ப்பு என்று இதுவரை 40க்கும் மேற்பட்ட படைப்புகளைக் கொடுத்தவர். சிகரம்‌ எனும் இதழின்‌ ஆசிரியர். பல விருதுகளுக்கு உபயதாரர். 31 கவிதைகள் அடங்கிய இருள்வலி எனும் ஐயாவின் கவிதை புத்தகத்தை வாசிக்கநேர்ந்தது. ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு உலகத்துக்குள் நுழைந்ததுபோன்ற‌ அனுபவம் கிடைத்தது. காட்சிகளை கண்முன்னே கொணர்ந்து நிறுத்தின ஒவ்வொரு கவிதைகளும். உணர்ச்சி மற்றும்‌ ஆர்வ ஊற்று ஆறாய் பாய்கிறது. இதோ, அவரோடு ஓர் உரையாடல்...

கனிமொழி கவிதைகள்

4. கனிமொழி கவிதைகள்

கவிஞர் கனிமொழி அவர்களின், கவிதை வரிகளில் நனைந்த பின்பு, கேள்விகள் கேட்டு இதம் கொள்ள வேண்டும் என்பதே அவா. மரித்த மீனின் கண்ணிலும் கவிதை காண்பவர், கனிமொழி. அவ்வண்ணம், வாருங்கள் படைப்போம் குழுவின் சார்பில், கிட்டிய வாய்ப்பில், புலத்திற்கு எட்டிய கேள்விகளை கேட்டேன். இதுவே என் முதல் புத்தக திறனாய்வு. வாய்ப்பு வழங்கிய குழுவிற்கும், என்னை பரிந்துரை செய்த, எங்கள் கல்லூரி அறங்காவலர், திரு. ஆலடி எழில்வாணன் அவர்களுக்கும், சிறியேனின் நன்றி.

மாதவராஜ் - ஆதலினால் காதல் செய்வீர், போதி நிலா

5. மாதவராஜ் - ஆதலினால் காதல் செய்வீர், போதி நிலா

வாருங்கள் படைப்போம் குழுவின் மூலமாக கிடைத்த இந்த வாய்ப்பு, மிகவும் சிறப்பானது. என்ன தவம் புரிந்தோம்? மாதவம் புரிந்தோம்! மாதவத்தின் எழுத்துக்களை புரிந்தோம்... திருச்செந்தூரில் பிறந்து, இன்று சென்னையில் வாழும், சிறந்த படைப்பாளர்... திருநெல்வேலி, நான் பிறந்த ஊர் என்பதால், இவர் புத்தகங்களை வாசிக்கையில், மண் வாச நினைவுகளோடு, ஒரு சொட்டாவது கண்ணீர் வந்துவிடுகிறது. பாமரர்களின் வாழ்வியலை, படம் பிடுத்து காட்டுகிறார், மாதவராஜ். ஆதலினால் காதல் செய்வீர் என காதல் பாடம் எடுத்தவர், போதி நிலாவில் கண்ணீர் வடிக்க கட்டுரை கட்டுகிறார். கேள்விகளுக்கு அளித்த கனிவான பதிலுக்கும், பல வருட பக்குவங்களை பனுவலாக்கி தந்தமைக்கும், அண்ணாருக்கு நன்றி.