கிடைக்குமா என்பதிலிருந்து
கிடைத்தது நிலைக்குமா என்பதுவரை
“நீளுகிறது ஏக்கம்”

பணம் படைத்தோர் எளிதில் பெரும் இன்பத்தை - நல்ல
மனம் படைத்தோர் துன்பப்பட்டுதான் பெறவேண்டுமா என
“நீளுகிறது ஏக்கம்”

கணம் கணம் - தந்தை வியர்வை சிந்தினால்தான்
தினம் தினம் என் வாழ்க்கையா என
“நீளுகிறது ஏக்கம்”

தோழனின் தோளில் தோள் சாய்ந்து கொண்டாலும்
தேளதின் விடமாய் வலிக்காமல் வலித்து
“நீளுகிறது ஏக்கம்”

ஏதும் இல்லானாய்
எல்லாம் உள்ளானாய் இருந்தபோதிலும்
என்னை தனிமையில் விட மனமில்லாமல்
என்னோடு “நீளுகிறது ஏக்கம்”