ஓங்கிய பதவியை தாங்கிய ஒருவன்
ஓரிடம் வந்து உட்கார்ந்திருந்தான்!

வாங்கிய முத்தங்கள் வானளவாயினும்
வனத்தினுள் வாசம் புரிந்து வந்தான்!

தேங்கிய நீரில் தேகம் குளித்தவன்
தேசம் சுற்றிட தெனவுடன் எழுந்தான்!

பானகம் பருகி, பகட்டாய் வாழ்ந்தவன்
வானகம் தாண்டி வைகுண்டம் விரைந்தான்!

கண்ணனை கர்த்தனாய் கண்டு தெளிந்து
காட்டினுள் ஒரு புலி முதுகினில் அமர்ந்தான்!

வரிகள் யாவும் வழிந்து விழுந்ததும்
வன்புலி விடுத்து வாகனம் வாங்கினான்!

வாங்கிய வாகனம், வானுக்கும் மண்ணுக்கும்
ஓங்கி குதித்திட ஓஹோ என ஓய்ந்தான்!

தூக்கி எறிய தூரம் போய் விழ
பாக்கிஸ்தானுக்கு பக்கத்தில் ஆனான்!

இராணுவம் இருபுறம் ராகங்கள் பாட
இராவண மந்திரம் கூறி மறைந்தான்!

ஊக்கம் உயர்ந்து, உறுதியுடன் இருந்தவன்
தூக்கம் கலைந்து, துணிதுவைக்க போனான்! 🤧
பகற்கனவு பாவலன் அரவிந்தன்!