உடைந்த இதயம், உத்வேகம் கொண்டது!
ஊட்டியின் காற்று, உடல் உரசி போனதனால்!

அழுதிட்ட கண்கள், ஆறுதல் அடைகின்றன!
அழகிய காரிகையை ஆராதனை செய்வதனால்!

நொறுங்கிய மனமும், நோய் நீங்குகிறது!
நெருங்கியே அவள் வரும் நேரங்களெல்லாம்!

தட்டியே எழுப்பிய சத்தமும் செல்கிறது!
எட்டியே ஒருமுறை என்னையும் காண்பாளோ?

அமர்ந்தவள் பேசும் அழகினைக் கண்டு,
சுமந்தவள் எண்ணமும் சுரக்கிறது என்னுள்!

யார் இவள்!?
என்னை குணமாக்குகிறாள்!