தாமிரபரணியை
தன்னுள்ளே பொதிந்தவள்!
தாரணி அழகெல்லாம்
தன்னழகாய் கொண்டவள்!

அழகுத் தெருக்களில்
அரிசிக் கோலம் பெறுபவள்!
இளகு இயற்கை எழில்
எண்ணிலாமல் ஏற்றவள்!

நாணல், நந்நெல்லும்
நடுங்கழனி நாட்டினள்!
நாணும் பெண்ணினும்
(நான்) நயந்திடும் அழகினள்!

அகத்துயரை துடைத்துவிடும்
அதிகாலை காற்றினள்!
அன்பில் உயர்ந்த மக்கள்,
அதிகம் வாழும் அன்பினள்!

அன்பாகி அழகாகி
ஆறோடும் மேனியினள்!
அம்பாசமுத்திரம் எனும் - என்
தென்பாண்டி இராணியினள்!